Published on 31/12/2021 | Edited on 31/12/2021

இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் 9,195 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியான நிலையில், நேற்று 13,154 பேருக்கு கரோனா உறுதியானது. இந்தநிலையில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில், நாட்டில் 16,764 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு 220 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு ஆயிரத்தை கடந்துள்ளது. மொத்தம் 1270 பேருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 374 பேர் பாதிப்பிலிருந்து குணமாகியுள்ளனர்.
நாட்டிலேயே அதிகபட்சமாக மஹாராஷ்ட்ராவில் 450 பேருக்கும், டெல்லியில் 320 பேருக்கும், கேரளாவில் 109 பேருக்கும் ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.