மக்களவை தேர்தல் முடிந்த வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில் பாஜக தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்திருக்கிறது. இந்நிலையில் வரும் 30 ஆம் தேதி மோடி மீண்டும் பிரதமராக பொறுப்பேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மோடியின் அரசு முறை வெளிநாட்டு பயணத்திட்டம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
![modis foreign trip schedule after pm oath](http://image.nakkheeran.in/cdn/farfuture/LNykicx-shZRWBgIl0dWQXCxw0KYE8gcFXFX__kvzaw/1558770924/sites/default/files/inline-images/ModiTravel-std_0.jpg)
அதன்படி மோடி பதவி ஏற்ற பின் ஜூன் 13 ஆம் தேதி கிர்கிஸ்தானில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க உள்ளார். அதன்பின் ஜூன் 28 -ல் ஜப்பானில் 2 நாள் ஜி-20 மாநாட்டில் பங்கேற்கிறார். தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் பிரான்ஸ் நாட்டிற்கும், செப்டம்பரில் ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளார். அதனைத்தொடர்ந்து நவம்பரில் தாய்லாந்து, பிரேசில் நாடுகளுக்கும் மோடி பயணம் மேற்கொள்ளகிறார். இதன் மூலம் பிரதமராக மோடி பதவி ஏற்று அடுத்த 6 மாதத்தில் 7 நாடுகளுக்கு பயணம் செய்ய உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.