
பிரதமர் மோடி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக இன்று தமிழகம் வருகிறார். மதுரை தோப்பூரில் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க சமீபத்தில் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. 1,264 கோடியில் அமையவுள்ள இந்த எய்ம்ஸ் மருத்துவமனையில் 750 படுக்கைகள் மற்றும் நவீன பரிசோதனை கருவிகள் நிறுவப்பட உள்ளன. மேலும் மருத்துவம் பயில 100 எம்.பி.பி.எஸ். கல்வி இடங்களும் ஒதுக்கப்பட உள்ளன. இதற்கான அடிக்கல் நாட்டு விழா, மதுரை மண்டேலா நகரில் இன்று நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று பகல் 11.15 மணிக்கு மதுரை வருகிறார். பிரதமர் வருகையை முன்னிட்டு மதுரை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமரின் தமிழக வருகையை ஆதரித்தும் எதிர்த்தும் பல்வேறு ஹாஷ்டாக்குகள் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகின்றன. #GoBackModi, #TNWelcomesModi, #GoBackSadistModi, #MaduraiThanksModi போன்ற ஹாஷ்டாக்கள் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.