இந்திய பிரதமர் மோடிக்கு ஒரு பெண் மேக்கப் செய்வதுபோன்று சமூக வலைதளத்தில் புகைப்படம் ஒன்று வெளியானது. மேலும், அந்த மேக்கப் செய்பவருக்கு மாத ஊதியம் 15லட்சம் என்றும் ஒரு செய்தி பரவியது. சமூக வலைதளத்தில் இது பற்றியான விவாதம் காரசாரமாக பரவியது.
இது சரியான தகவலா என்றும் சமூகவலைதளத்தில் ஆராயப்பட்டது. பின்னர், பலர் ஆராய்ந்ததில் இந்த புகைப்படம் லண்டன் மெழுகுச்சிலை வைக்கும் மியூசியத்தில் எடுக்கப்பட்டது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லண்டனிலுள்ள மேடம் டுசாட்ஸ் மியூசியத்தில் உலகத் தலைவர்கள் மற்றும் புகழ்பெற்ற பிரபலங்களின் மெழுகுச்சிலை வைக்கப்படும் மியூசியத்தில் இந்திய பிரதமர் மோடிக்கும் மெழுகுச்சிலை வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2016-ம் ஆண்டு, அந்தச் சிலை செய்வதற்காகச் சிலைசெய்யும் கலைஞர்கள், மோடியின் உருவ அளவை எடுக்கும்போது எடுத்த புகைப்படம்தான் தற்போது வைரலாகி வருவது என்றும் தெரியவந்துள்ளது.