Skip to main content

'செப்டம்பரில் ரூ.95,480 கோடி ஜி.எஸ்.டி வசூல்'- மத்திய நிதியமைச்சகம் தகவல்!

Published on 01/10/2020 | Edited on 01/10/2020

 

ministry of finance has been announced sep gst tax amount

 

செப்டம்பர் மாதம் ரூபாய் 95,480 கோடி ஜி.எஸ்.டி வசூலாகியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.

 

செப்டம்பர் மாத ஜி.எஸ்.டி வசூலில், மாநில ஜி.எஸ்.டி ரூபாய் 23,131 கோடி, மத்திய ஜி.எஸ்.டி ரூபாய் 17,741 கோடி வசூலாகியுள்ளது. அதேபோல், இறக்குமதி ஜி.எஸ்.டி ரூபாய் 47,484 கோடியும், செஸ் வரியாக ரூபாய் 7,124 கோடியும் வசூலாகியுள்ளது. இந்த அனைத்து வரிகளையும் சேர்த்து, செப்டம்பர் மாதத்தில் மட்டும் ரூபாய் 95,480 கோடி ஜி.எஸ்.டி வசூலாகியுள்ளது. இந்த தகவலை மத்திய நிதியமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

 

கடந்த ஆகஸ்ட் மாதம் ரூபாய் 86,449 கோடி ஜி.எஸ்.டி வரி வசூலிக்கப்பட்ட நிலையில், செப்டம்பரில் ரூபாய் 95,480 கோடி வசூலாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"கவலைப்படவில்லையா...?” - அமித்ஷாவுக்கு கபில் சிபல் கேள்வி

Published on 09/06/2023 | Edited on 09/06/2023

 

are you not worried kapil sibal question to amit shah

 

கொலைக் குற்றங்கள் அதிகரித்து வருவது குறித்து கவலைப்படவில்லையா என அமித்ஷாவுக்கு கபில் சிபல் கேள்வி எழுப்பி உள்ளார்.

 

பிரபல ரவுடி  சஞ்சீவ் ஜீவா விசாரணைக்காக உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோ நீதிமன்றத்திற்கு நேற்று முன்தினம்  (07.06.2023) அழைத்து வரப்பட்டார் அப்போது அங்கு இருந்த மர்ம கும்பலால் சஞ்சீவ் ஜீவா சுட்டுக் கொல்லப்பட்டார். நீதிமன்ற வளாகத்தின் உள்ளே நிகழ்ந்த இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. மேலும் உத்தரப் பிரதேசத்தில் தொடர்ந்து ரவுடிகள் கொலை செய்யப்பட்டு வரும் சம்பவம் அதிகரித்து உள்ளது.

 

இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கபில் சிபல் ட்விட்டரில், "கடந்த 2017 முதல் 2022 ஆம் ஆண்டு வரை உத்திரப் பிரதேச மாநில போலீஸ் காவலில் இருந்த 41 பேர் கொல்லப்பட்டனர். சமீபத்தில் போலீஸ் காவலில் இருந்த சஞ்சீவ் ஜீவா லக்னோ நீதிமன்றத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். போலீஸ் காவலில் இருந்தபோது அத்திக் மற்றும் அஷ்ரப் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். திகாரில் துல்லு தாஜ் பூரியா சுட்டுக் கொல்லப்பட்டார். ஏன், எப்படி இந்த சம்பவங்கள் நடைபெறுகின்றன. அமித்ஷா அவர்களே நீங்கள் இது பற்றி கவலைப்படவில்லையா. இது குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம்" என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கேள்வி எழுப்பி உள்ளார். 

 

 

Next Story

"மத்திய ரயில்வே துறை அமைச்சர் பொறுப்பற்ற முறையில் பேசுகிறார்" - கபில் சிபல் காட்டம்

Published on 05/06/2023 | Edited on 05/06/2023

 

union minister of railways speaks irresponsibly kapil sibal

 

ஒடிசா மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு மூன்று ரயில்களுக்கு இடையே ஏற்பட்ட விபத்தின் காரணமாக தற்போது வரை 288 பேர் இறந்துள்ளதாகத் தகவல் வெளிவந்த நிலையில், 275 பேர் இறந்துள்ளதாக ஒடிசா மாநிலத் தலைமைச் செயலர் பிரதீப் ஜனா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் ஏற்கனவே சொல்லப்பட்ட பலி எண்ணிக்கைகள் என்பது சில சடலங்களை மீண்டும் எண்ணியதால் ஏற்பட்ட குழப்பத்தால் தவறாக அறிவிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

 

இதற்கிடையில் துயரமான இந்த சம்பவத்திற்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும். மேலும் இந்த விபத்திற்குப் பொறுப்பேற்று இந்திய ரயில்வே துறை அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும் எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த விபத்து குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என ரயில்வே வாரியம் பரிந்துரைத்துள்ளது. ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இது குறித்த அறிவிப்பில் 'மீட்பு பணிகள் நிறைவடைந்து தற்போது சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து இந்த விபத்து குறித்து சிபிஐ விசாரிக்க பரிந்துரை கொடுக்கப்பட்டுள்ளது' எனத் தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் மாநிலங்களவை உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான கபில் சிபல் தனது ட்விட்டரில், "ரயில் விபத்து குறித்து மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பொறுப்பற்ற முறையில் பேசுகிறார். ரயில்வே, மின்னணுவியல், தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம் என இத்தனை அமைச்சக பொறுப்புகளையும் அஸ்வினி வைஷ்ணவ் ஒருவரால் கவனிக்க முடியவில்லை. வந்தே பாரத் மற்றும் புல்லட் ரயில் சேவைகளில் கவனம் செலுத்தும் மத்திய அரசு சாதாரண மக்களுக்கான ரயில் சேவையை சரியாக கவனிப்பதில்லை. ரயில்வே துறைக்கென தனி பட்ஜெட் இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.