Skip to main content

பீகார் முதல்வர் வரை சென்ற விவகாரம்; விளக்கமளித்த தமிழக டிஜிபி

Published on 03/03/2023 | Edited on 03/03/2023

 

nn

 

அண்மையில் பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வெளியாகியது. இந்த வீடியோ போலியானது என தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “பீகார் தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்பட்டதாக ஒரு தவறான போலியான வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இரண்டு வீடியோக்கள் பதிவிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு வீடியோக்களுமே போலியானது. இந்த இரண்டு சம்பவங்களும் திருப்பூர் மற்றும் கோயம்புத்தூரில் நிகழ்ந்தது. இந்த இரண்டு சம்பவத்தில் ஒன்று பீகாரை சேர்ந்த இரு குழுக்களில் ஏற்பட்ட மோதல், மற்றொன்று கோயம்புத்தூரில் தமிழகத்தை சேர்ந்த உள்ளூர் மக்கள் மோதிக்கொண்டது. ஆனால் இது அப்படியே மாற்றப்பட்டு தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக போலி செய்தி பரப்பப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக இருக்கிறது” என்றார்.

 

முன்னதாக 'தமிழகத்தில் பணிபுரியும் பீகார் தொழிலாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து நான் செய்தித்தாள்களில் அறிந்தேன். தமிழக அரசுடன் பேசி பீகாரில் வசிக்கும் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு பீகார் தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை இயக்குநருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்' என பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ட்வீட் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்