
அண்மையில் பள்ளி மாணவிகள் தலைவிரி கோலமாக தரையில் அழுது புரண்டு அலறும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில் அந்த மாணவிகள் 'மாஸ் ஹிஸ்டீரியா' எனும் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உத்தரகாண்ட மாநிலம் பாகேஷ்வர் என்ற இடத்தில் உள்ள அரசு பள்ளியில் பயிலும் மாணவிகள் ஒரே நேரத்தில் வெறிபிடித்ததுப் போல் கூச்சலிட்டுத் தலைவிரி கோலத்தில் அழுது புரண்டனர். மாணவிகளின் இந்த விநோத நடவடிக்கையை பார்த்த ஆசிரியர்கள் அரண்டு போயினர். மாணவிகள் 'மாஸ் ஹிஸ்டீரியா' எனும் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.'மாஸ் ஹிஸ்டீரியா' என்பது ஒரு வித மன அழுத்த நோய் ஆகும் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சத்தமிட்டும், அழுதும் தங்களது உணர்ச்சிகளை வெளிப்படுத்துவர் என மனநல மருத்துவர்கள் விளக்கமளித்துள்ளனர். இருப்பினும் இந்த வீடியோவில் பள்ளி மாணவிகள் ஆளுக்கொரு பக்கமாக அழுது புரண்டு கூச்சலிடும் காட்சிகள் சற்று பயத்தையே உருவாக்குகிறது.