![manmohan singh](http://image.nakkheeran.in/cdn/farfuture/KFa66bA_VoHOTFLICUiV25I7pDGnALQ3Om4xdG-suqg/1542831038/sites/default/files/inline-images/manmohan-singh.jpg)
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் இவ்வாறு கூறியுள்ளார்,
மோடி அரசின் பணமதிப்பு ரத்து நடவடிக்கை மாபெரும் தோல்வியாகும். பணமதிப்பிழப்பு நடவடிக்கையும் தவறான ஜி.எஸ்.டி சட்டமும் மக்களை வதைத்துவிட்டன. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் நோக்கம் ஒன்றுகூட நிறைவேறவில்லை. கருப்பு பணத்தை சட்டப்பூர்வமாக்கவே பணமதிப்பிழப்பு நடவடிக்கை உதவியுள்ளது. மத்தியில் பாஜக ஆட்சியமைத்த பிறகு வேலைவாய்ப்பு அதிகரிக்கவே இல்லை. வருடத்திற்கே 17,600 வேலைவாய்ப்புகள்தான் பாஜக ஆட்சியில் வழங்கப்பட்டுள்ளன. வேலை கிடைத்ததால் தற்கொலை செய்துகொள்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நாடாளுமன்றம், சிபிஐ போன்ற தேசிய அமைப்புகளை பாஜக அரசு சீர்குலைத்து வருகிறது. திட்டமிட்ட முறையில் தேசிய அமைப்புகளை பாஜக அரசு பலவீனப்படுத்தி வருவதாக கண்டனம் தெரிவித்துள்ளார். ரஃபேல் விமான பேரம் தொடர்பாக அரசுமீது மக்களுக்கு பெரும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது, இதுகுறித்த நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை.
எதிர்கட்சிகள் மற்றும் பல அமைப்புகளின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்க மறுப்பது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.