
மகாராஷ்டிரா மாநிலம், மும்பையின் கண்டிவலி பகுதியைச் சேர்ந்தவர் சிவசங்கர் தத்தா(40). இவருக்கு புஷ்பா (36) என்ற மனைவியும், ஒரு மகனும் இருந்தனர். இந்த நிலையில், வீட்டில் தனது மனைவி புஷ்பாவும் மகனும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாகப் போலீசாரிடம் புகார் அளித்தார்.
அந்த புகாரின் அடிப்படையில், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், சிவசங்கர் தத்தா, முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். இதை கேட்டு சந்தேகமடைந்த போலீசார், அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அதில், மனைவி மகனை தான் கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.
மனைவிக்கு தனக்கு துரோகம் செய்ததாக சிவசங்கர் சந்தேகமடைந்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த அவர், நைலான் கயிற்றை வைத்து மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்தார். இந்த கொலையை மகன் நேரில் பார்த்துவிட்டதால், அவனையும் சிவசங்கர் கொலை செய்ததாகப் போலீசாருக்கு தெரியவந்தது. சிவசங்கர் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, போலீசார் அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.