Published on 05/07/2019 | Edited on 05/07/2019
மகாராஷ்டிரா மாநிலம் கங்காவேலி பாலம் அருகே மும்பை- கோவா சாலையில் உள்ள பள்ளங்களை ஆய்வு செய்வதற்காக சென்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ, நெடுஞ்சாலைத் துறை பொறியாளர் பிரகாஷ் சேதேகா என்பவரை தாக்கியதால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வியாழக்கிழமை ஆய்வுக்காக வந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ நிதிஷ் ரானே, அவருடைய ஆதரவாளர்களுடன் இணைந்து சாலையின் மோசமான நிலை குறித்து பொறியாளருடன் வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், பொறியாளர் மீது எம்.எல்.ஏ மற்றும் அவரது ஆதரவாளர்கள் சேற்றை ஊற்றினார்.
அவர் சேற்றை ஊற்றிய வீடியோ இணையத்தில் வைரலாக நிலையில் காவல்துறையினரிடம் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் இன்று எம்.எல்.ஏ நிதேஷ் ரானே கைது செய்யப்பட்டார். அவர் மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் நாராயண் ரானேவின் மகன், என்பது குறிப்பிடத்தக்கது.