Published on 05/12/2018 | Edited on 05/12/2018
![gsa](http://image.nakkheeran.in/cdn/farfuture/62A9mmS3M_TlopOu0Xgb25Kqsj86Wd9oqueSaLV_G6Y/1544007136/sites/default/files/inline-images/gsat-in.jpg)
தொலைத்தொடர்புக்கு உதவும் வகையில் இஸ்ரோ தயாரித்த ஜிசாட் 11 செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்தியாவில் தயாரிக்கப்பட்டதில் அதிக எடை கொண்ட தொலைத்தொடர்பு செயற்கைகோள் இதுவாகும். 5854 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைகோள் இன்டர்நெட் வேகத்தை அதிகரிக்கவும், அரசாங்கத்தின் இ சேவைக்கு உதவும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.