Published on 20/11/2018 | Edited on 20/11/2018

ஐந்து மாநிலத்திற்கான தேர்தல் பிரச்சாரங்கள் மும்முரமாக நடந்துகொண்டு இருக்கிறது. அதில் சத்தீஸ்கர் தேர்தல் இன்றுடன் முடிவடைகிறது. இதனை அடுத்து பாஜக தற்போது மத்திய பிரதேசத்தில் வெற்றிபெற்றே தீர வேண்டும் என்று அக்கட்சியின் பெரிய தலைவர்களை களத்தில் இறக்கியுள்ளது.
அங்கு குறிப்பிட்ட சில பகுதிகளில் பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இன்று மபியிலுள்ள ஜாபியு தொகுதியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பேசியுள்ள மோடி, ”மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி பொறுப்பில் இருந்த காலத்தை நினைத்து பாருங்கள். அப்போது மக்களின் நிலை என்ன, மக்களின் வாழ்வாதாரத்தை பற்றி யோசிக்காத காங்கிரஸ் மத்திய பிரதேசத்தை ஆளுவதற்கு தகுதியற்றவர்கள்” என்றார்.