Published on 05/11/2019 | Edited on 05/11/2019
ரூ. 7000 கோடி மதிப்புள்ள பல்வேறு வங்கி மோசடிகள் தொடர்பாக இன்று காலை முதல் நாட்டின் 15 மாநிலங்களில் சிபிஐ அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறது.
இன்று அதிகாலை முதலே தமிழகம், கேரளா உள்ளிட்ட நாட்டின் 15 மாநிலங்களில் 170 இடங்களில் மத்திய புலனாய்வுத் துறை சோதனை மேற்கொண்டுள்ளது.
ரூ .7,000 கோடி மோசடி சம்பந்தப்பட்ட 35 கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவர்களின் இடங்களில் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. எந்த வங்கியில், யார் செய்த மோசடி என்பது குறித்த தகவல்கள் அதிகாரபூர்வமாக வெளியிடப்படாத நிலையில், ஆந்திரா, சண்டிகர், டெல்லி, குஜராத், ஹரியானா, கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப், தமிழ்நாடு, தெலுங்கானா, உத்தரப்பிரதேசம் மற்றும் தாத்ரா & நகர் ஹவேலி ஆகிய பகுதிகளில் சோதனை நடைபெற்று வருகிறது.