அஹமதாபாத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தன்னுடைய கணவரை பிரிந்து காதலனுடன் 15 வருடமாக வாழ்ந்து வருகிறார். தற்போது இந்த பெண்ணின் காதலன், இவர் அழகாக இருந்தால் வேறொருவருடன் சென்றுவிடுவார் என்று சந்தேகப்படுவதால், அப்பெண்ணின் முற்பற்கள் இரண்டையும் பிடுங்கிவிட வேண்டும் என்று சித்தரவதை செய்துள்ளார். இதனால், வேறு எந்த ஆணும் அப்பெண்ணை பார்க்க மாட்டார்கள் என்பதால் இவ்வாறு செய்திருக்கிறாராம்.
அந்த 57 வயதுடைய ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர் இச்சம்பவத்துடன் நிற்காமல் கீதாபென்(55) என்னும் அந்த பெண்ணை வேலைக்கும் செல்லக்கூடாது என்று தடுத்து நிறுத்தியுள்ளார். இந்நிலையில், கடந்த புதன்கிழமை அவர் ஆட்டோ ரிக்ஷா ஓட்டிக்கொண்டு உடன் கீதாபென்னையும் அழைத்து சென்றுகொண்டிருக்கும்போது அவர் சித்தரவதைகளில் இருந்து மீள கீதாபென் ஆட்டோவை விட்டு கீழே விழுந்து தப்பித்துள்ளார். பின்னர் அபாயம் என்னும் பெண்கள் சேவை எண்ணுக்கு தொடர்புகொண்டு ஆலோசகர்களிடம் பேசியுள்ளார். அப்போது, "ஏற்கனவே என் கணவர் என் மீது சந்தேகப்பட்டுக்கொண்டே இருந்தார் என்பதால்தான் இவரைக் காதலித்து அவருடன் வாழ்ந்து வருகிறேன். ஆனால் இவரும் என் மீது சந்தேகப்பட்டு சித்தரவதை செய்கிறார்" என்று பகிர்ந்துள்ளார்.
இந்த இருவரும் அவர் அவரின் கணவன்,மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து 15 வருடங்களாக வாழ்ந்து வருகிறார்கள். தொடக்கத்தில் எந்த சந்தேகமும் இல்லாமல் இருந்தவர், கடந்த வருடத்திலிருந்து ஒவ்வொரு நொடியும் அந்த பெண்ணின் மீது சந்தேகப்பட்டுள்ளார். முதலில் பற்களை பிடுங்கியவர். பின், வீட்டிலிருந்து அவர் யாரையோ பார்த்து பேசி பழகுகிறார் என்று ஜன்னல் கதவுகளை மூடிவிட்டார். தற்போது சந்தேகம் முற்றிப்போய் கீதாவை ஆட்டோ ரிக்ஷாவிலேயே தன்னுடனே வைத்து அழைத்து சென்று வந்துள்ளார். அவரின் தொல்லை தாங்கமுடியாமல் கடைசியில் கீழே விழுந்து தப்பித்துச்சென்று ஆலோசகரை அணுகியுள்ளார். ஆலோசகர்களும் சந்தேகத்திற்கு மருந்தில்லை, அவர்தான் யோசித்து செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இறுதியில் அந்த ஆட்டோ ரிக்ஷாக்காரரிடம் கீதாவுக்கு சுதந்திரம் அளிக்க வேண்டும், அவரின் மீது சந்தேகப்படக்கூடாது" என்று எழுதி வாங்கியுள்ளனர்.