Published on 25/03/2019 | Edited on 25/03/2019
இந்தியா முழுவதும் நாடாளுமன்ற தேர்தலும், சில மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலும் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. வரும் ஏப்ரல் 18ம் தேதி தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கு மக்களவை தேர்தலும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நடைபெறவுள்ளது.
![banner ban in loksabha elections](http://image.nakkheeran.in/cdn/farfuture/UUQPtXYZGIE6-SaoVIDfufNmYr_BtSzg-2PAXQDcIv4/1553494817/sites/default/files/inline-images/supreme-court--in_7.jpg)
இதனையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் மலைகள், காடுகள், சாலைகளில் அரசியல் கட்சிகளின் பேனர்கள் மற்றும் விளம்பரங்களுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து ஆணை பிறப்பித்துள்ளது.