Skip to main content

தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் 'வீடு' கட்டும் திட்டம்! - பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

Published on 01/01/2021 | Edited on 01/01/2021

 

 

தமிழகம் உள்பட 6 மாநிலங்களில், வீட்டுவசதி வாரியத்தின் கீழ் 'வீடு' கட்டும் திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

 

சென்னை, இந்தூர், ராஜ்கோட், ராஞ்சி, அகர்தலா, லக்னோவில் வீட்டுவசதி வாரியத்தின் கீழ் 'வீடு' கட்டும் திட்டத்திற்கு டெல்லியில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலம் அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் மத்திய விமானப் போக்குவரத்து மற்றும் வீட்டுவசதி மற்றும் விவகாரத்துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி, தமிழகம், ஆந்திரா, உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம், திரிபுரா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநில முதல்வர்கள் பங்கேற்றனர்.

 

இந்தத் திட்டத்தின் மூலம் சென்னை பெரும்பாக்கத்தில் ரூபாய் 116.27 கோடி மதிப்பில் 1,152 வீடுகள் கட்டப்பட உள்ளன. 413 சதுர அடியில் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையிலும், பேரிடரைத் தாங்கும் வகையிலும் வீடுகள் கட்டப்படுகின்றன. பால்கனி உள்ளிட்ட அம்சங்களுடன் வீடுகள் கட்டப்படுகின்றன. புதிய தொழில்நுட்பத்தில் வீடு கட்டப்படும். வீடுகட்டும் பணிகள் 12 மாதத்தில் முடிக்கத் திட்டமிட்டுள்ளது.  

 

 

 

சார்ந்த செய்திகள்