Published on 30/08/2018 | Edited on 30/08/2018
![lallu prasad](http://image.nakkheeran.in/cdn/farfuture/q6RE4KOcttWoe_bSWRs1ctlT2_yG3XxReYKaj49VrLk/1535633014/sites/default/files/inline-images/lallu.jpg)
கால்நடை தீவன வழக்கில் கைது செய்யப்பட்ட பிஹார் முன்னாள் முதலமைச்சர் லல்லு பிரசாத் யாதவ், தன்னுடைய மகன் திருமணம், மருத்துவ சிகிச்சை என்று அவருக்கு மூன்று மாதம் ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்த ஜாமீன் முடியவிற்கும் நிலையில், மேலும் மூன்று மாதம் ஜாமீன் வேண்டும் என்று ராஞ்சி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், நீதிமன்றம் அதை நிராகரித்து ஆகஸ்ட் 30ஆம் தேதி சிபிஐ நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனால் மும்பையில் மருத்துவம் பார்த்துவந்தவர் சில நாட்களுக்கு முன்பு பிஹார் வந்தடைந்தார்.
நீதிமன்றத்தில் சரணடைவதாக உத்தரவிடப்பட்டதால் நேற்று பாட்னாவில் இருந்து ராஞ்சி வந்தடைந்தார். உத்தரவிட்டதுப்படி, ராஞ்சி சிபிஐ நீதிமன்றத்தில் சரணடைந்தார் லல்லு பிரசாத் யாதவ்.