
கேரளாவில் பேருந்திலேயே பெண்ணுக்கு பிரசவம் நடைபெற்ற சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து தொட்டில்பாலம் நோக்கி அரசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தது. அபொழுது திடீரென பேருந்தில் பயணித்த கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு பேருந்து கொண்டு செல்லப்பட்டது. மருத்துவமனை சென்றாலும் வலி அதிகரித்ததால் பெண்ணை பேருந்தில் இருந்து மருத்துவமனை வளாகத்திற்குள் கொண்டு வர முடியாத சூழல் ஏற்பட்டது.
இதனால் மருத்துவ உபகரணங்களுடன் மருத்துவர்கள் அரசு பேருந்துக்கே வந்தனர். பின்னர் பேருந்தில் வைத்தே பெண்ணுக்கு பிரசவம் பார்க்கப்பட்டது. பிரசவத்திற்கு பின்னர் தாயும் சேயும் நலமாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலராலும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.