Skip to main content

அயோத்தியில் இறைச்சி, மதுவுக்கு தடை- யோகி ஆதித்யநாத்

Published on 12/11/2018 | Edited on 12/11/2018
yogi


பாஜக மற்றும் இந்து அமைப்புகளால் புனித பூமி என்று அழைக்கப்படும் அயோத்தி மாவாட்டத்தில் இறைச்சி, மதுவுக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்.  முஹலாயர்கள் காலத்தில் அயோத்தியாவை பைசாபாத் என்று மாற்றப்பட்டதாக பாஜகவினர் சொல்கின்றனர். இது புனித பூமி என்பதால் அந்த பழமையான பெயர் என்று சொல்லப்படும் அயோத்தியாவே வைக்க வேண்டும் என்று பாஜக தரப்பில் சொல்லப்பட்டு, பின் மாற்றவும் பட்டது. தற்போது அந்த மாநிலத்தில் இறைச்சி, மதுவும் மாவட்டம் முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் அயோத்தியில் மருத்துவக் கல்லூரி, விமான நிலையம் உள்ளிட்டவையும் அமைத்து தரப்படும் என்று முதல்வர் கூறியுள்ளார. இந்த தடை உத்தரவால் அந்த மாவட்டத்திலுள்ள 250க்கும் மேற்பட்ட இறைச்சி வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்