Published on 16/12/2020 | Edited on 16/12/2020
தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உறுப்பினர்களாக தமிழகத்தைச் சேர்ந்து இருவரை நியமித்து மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வானது டெல்லியில் செயல்பட்டு வருகிறது. அதேபோல் சென்னையில் தென் மண்டல பசுமை தீர்ப்பாயமும், மேலும் 3 இடங்களில் பசுமை தீர்ப்பாய கிளையும் செயல்பட்டு வருகின்றன.
தமிழகத்தின் முன்னாள் தலைமைச் செயலாளராக இருந்த கிரிஜா வைத்தியநாதன் ஐ.ஏ.எஸ். மற்றும் பேரிடர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையராக பணியாற்றி ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சத்யகோபால் ஆகியோர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் மாத சம்பளம் 2,25,000 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.