Skip to main content

குடியுரிமை சட்டத்தை எதிர்ப்பவர்கள் பாகிஸ்தான் செல்லுங்கள் - பாஜக எம்எல்ஏ சர்ச்சை கருத்து!

Published on 04/01/2020 | Edited on 04/01/2020

நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு இரண்டு அவைகளிலும் சில வாரங்களுக்கு முன்பு நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பிய இந்த பிரச்சனையில் எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.  இதுதொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், நாடு முழுவதும் அதை எதிர்த்து போராட்டம் நடைபெற்று வருகின்றது. 
 

k



இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அம்மாநில பாஜக எம்.எல்.ஏ சோம சேகர் ரெட்டி இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பேசும்போது, " இந்த நாட்டில் இந்துக்கள் 80 சதவீதம் உள்ளோம். நீங்கள் 17 சதவீதம் தான். நாங்கள் உங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் என்ன ஆகும் என்று நினைத்து பாருங்கள். குடியுரிமை சட்டத்தையோ அல்லது தேசிய குடிமக்கள் பதிவேட்டையோ எதிர்ப்பீர்கள் என்றால் நீங்கள் பாகிஸ்தானுக்கு செல்லலாம்" என்று பேசியுள்ளார். 
 

சார்ந்த செய்திகள்