Published on 20/05/2018 | Edited on 20/05/2018
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று தனியார் தொலைக்காட்சி விருது வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக கேரள மாநிலம் கொச்சி சென்றார்.
அங்கு பிற்பகலில் கேரள முதல் மந்திரி பினராய் விஜயனை சந்தித்து பேசினார். கட்சி தொடங்கும் முன்பு பினராயி விஜயனை அவரது வீட்டுக்கு நேரில் சென்று சந்தித்து கட்சி தொடங்கி நடத்துவதற்கான ஆலோசனைகளை அவரிடம் கமல்ஹாசன் கேட்டு தெரிந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
நீட் தேர்வு எழுத கேரளா சென்ற தமிழக மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு உதவிகள் செய்ததற்கு நன்றி தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் கொச்சி சென்று பினராய் விஜயனை சந்திதுள்ள கமல்ஹாசன் அரசியல் பற்றியும், காவிரி பிரச்சினை குறித்தும் பேசியதாக கூறப்படுகிறது.