Published on 01/01/2019 | Edited on 01/01/2019

இன்று முதல் பள்ளிகளில் மாணவர்கள் வருகைப்பதிவேட்டிற்கு 'ப்ரெசென்ட் சார்' என சொல்ல குஜராத் கல்வி வாரியம் தடை விதித்துள்ளது. அதற்கு பதிலாக ஜெய் ஹிந்த், ஜெய் பாரத் என்றே கூற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக குஜராத் கல்வி வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இனி குஜராத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் இதனை பின்பற்ற வேண்டும் என ஆணையிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு இன்று முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டமானது ஏற்கனவே மத்திய பிரதேசத்திலும் பின்பற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.