Skip to main content

பிரியங்கா காந்தியின் பரபரப்பு குற்றச்சாட்டு - தானாக முன்வந்து விசாரிக்கும் மத்திய அரசு!

Published on 22/12/2021 | Edited on 22/12/2021

 

priyanka gandhi

 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடுத்தாண்டு தொடக்கத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதையடுத்து, அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், தனது தொலைபேசி  அழைப்புகளும், தனக்கு கட்சி தலைவர்களது தொலைபேசி அழைப்புகளும் உத்தரப்பிரதேச அரசால் ஒட்டுக்கேட்கப்படுகிறது எனப் பரபரப்பான குற்றச்சாட்டை எழுப்பினார்.

 

இந்தநிலையில் நேற்று இதுதொடர்பான கேள்விக்குப் பதிலளித்த பிரியங்கா காந்தி, "தொலைபேசி ஒட்டு கேட்கப்படுவதை விடுங்கள். அவர்கள் (உத்தரப்பிரதேச அரசு) எனது குழந்தைகளின் இன்ஸ்டாகிராம் கணக்கை ஹேக் செய்கிறார்கள். அரசுக்கு வேறு வேலை இல்லையா?" என்றார்.

 

பிரியங்கா காந்தியின் இந்த குற்றச்சாட்டுப் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம்,. பிரியங்கா காந்தியின் குற்றச்சாட்டுத் தொடர்பாக தானாக முன்வந்து விசாரிக்கவுள்ளதாக அந்த அமைச்சகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் இந்திய கணினி அவசரக்கால நடவடிக்கை குழு இந்த குற்றச்சாட்டை விசாரிக்க உள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இந்த பிரவுசரை அப்டேட் செய்யாமல் பயன்படுத்த வேண்டாம் - பயனர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!

Published on 18/02/2022 | Edited on 18/02/2022

 

microsoft edge

 

மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய கணினி அவசர நடவடிக்கைகள் குழு, மைக்ரோசாப்ட் எட்ஜ் பிரவுசரின் பழைய வெர்சன்களை பயன்படுத்துபவர்களுக்கு அதி தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த பிரவுசரின் பழைய வெர்ஷன்களில் இருக்கும் பல்வேறு குறைபாடுகள், சைபர் தாக்குதலை அனுமதிக்கும் என்பதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

சைபர் தாக்குதலில் இருந்து தப்பிக்க எட்ஜ் பிரவுசரை புதிய வெர்ஷனுக்கு அப்டேட் செய்யுமாறும் இந்திய கணினி அவசர நடவடிக்கைகள் குழு கேட்டுக்கொண்டுள்ளது. மைக்ரோசாப்ட் எட்ஜ்ஜின் புதிய வெர்ஷனான 98.0.1108.55 இந்த வாரம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

 

மைக்ரோசாப்ட் எட்ஜ்ஜின் புதிய வெர்ஷனான 98.0.1108.55-ல் புதிய பாதுகாப்பு அப்டேட்டுகளும், புதிய அம்சங்களும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

Next Story

ராகுல் காந்தியுடன் மோதலா? - பிரியங்கா காந்தி விளக்கம்!

Published on 14/02/2022 | Edited on 14/02/2022

 

rahul - priyanka

 

உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப், மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், இத்தேர்தலுக்கான இறுதிக் கட்ட பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ளன.

 

இந்தநிலையில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பிரியங்கா காந்திக்கும், ராகுல் காந்திக்கும் இடையே ஏற்பட்டுள்ள விரிசல் காங்கிரஸை வீழ்த்தும் எனத் தெரிவித்திருந்தார். இந்தநிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, தனக்கும் தனது சகோதரருக்கும் இடையே எந்தவித மோதலுமில்லை என தெரிவித்துள்ளார்.

 

இதுதொடர்பான கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த  பிரியங்கா காந்தி, என் சகோதரனுக்காக நான் உயிரையும் கொடுப்பேன். அவர் எனக்காக உயிரைக் கொடுப்பார். எங்களுக்கிடையே எங்கே மோதல் இருக்கிறது? பிரச்சனை யோகியின் மனதில்தான் உள்ளது. அவருக்கும், மோடி மற்றும் அமித்ஷாவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள விரிசல் காரணமாக அவர் இவ்வாறு கூறுவதாகத் தெரிகிறது” எனத் தெரிவித்துள்ளார்.