Published on 02/02/2022 | Edited on 02/02/2022

இந்தியாவில் ஏற்பட்ட கரோனா மூன்றாவது அலையின் காரணமாக மூன்றரை லட்சத்தை நெருங்கிய தினசரி கரோனா பாதிப்பு, அதன்பின்னர் தொடர்ந்து குறையத் தொடங்கியது. இந்நிலையில் நேற்று தினசரி கரோனா பாதிப்பு, இரண்டு லட்சத்திற்கும் கீழ் குறைந்தது.
நேற்று ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 59 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானது. இந்தநிலையில் தற்போது நாட்டில் கரோனா பாதிப்பு மேலும் குறைந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 386 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் 2 லட்சத்து 81 ஆயிரத்து 109 பேர் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.