Skip to main content

இந்தியாவில் 1,071 பேருக்கு கரோனா!

Published on 30/03/2020 | Edited on 30/03/2020

உலகளவில் கரோனாவுக்குப் பலியானோர் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 

உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,23,328 ஆக உயர்ந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34,005 ஆக அதிகரித்துள்ளது. உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1,51,991 பேர் குணமடைந்துள்ளனர்.

INDIA CORONA VIRUS CASE INCREASED

இந்தியாவில் கரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 1024 லிருந்து 1071 ஆக அதிகரித்துள்ளது. இதில் 1022 இந்தியர்கள், 49 வெளிநாட்டினர் என மொத்தம் 1071 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கேரளாவில் 194 பேரும், மகாராஷ்டிராவில் 193 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 29 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் 100 பேர் குணமடைந்துள்ளனர். இதனை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளது. 

 

சார்ந்த செய்திகள்