Published on 26/11/2020 | Edited on 26/11/2020
சீனாவிலிருந்து செயல்படும் மேலும் 43 செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
லடாக் எல்லைப் பகுதியில் நடைபெற்ற இந்திய, சீன வீரர்களுக்கு இடையேயான மோதலுக்குப் பிறகு, கடந்த ஜூன் மாதம் சீன நிறுவனங்களின் டிக்டாக், யூசி ப்ரவுசர், ஹலோ, ஷேரிட் உள்ளிட்ட 59 செயலிகளைத் தடை செய்வதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது. அதனைத்தொடர்ந்து செப்டம்பர் மாதம், வீசாட், பப்ஜி உள்ளிட்ட மேலும் 118 செயலிகளுக்குத் தடை விதித்தது. இந்தியாவின் இந்த நடவடிக்கைக்குச் சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த சூழலில், இந்தியாவின் தகவல் தொழில்நுட்பம் சட்டத்தின் 69ஏ பிரிவின் கீழ் மேலும் 43 செயலிகளைத் தடை செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு வெளியிட்டுள்ள இந்த பட்டியலில், அலிஎக்ஸ்பிரஸ், அலிபாபா, வீஒர்க் போன்ற பல பிரபலமான செயலிகள் இடம்பெற்றுள்ளன.