நேற்று ஒடிஷா மற்றும் ஆந்திரா மாநிலங்கள் வழியாக மேற்கு வங்கம் நோக்கி டிட்லி புயல் நகர்ந்தது. அப்போது புயல் காற்று கடுமையான வேகத்தில் வீசியது. நேற்று காலை சுமார் 126 கிமீ வேகத்தில் புயல் வீசியது. இதனால் ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகாகுளம், விசாகப்பட்டினம் மாவட்டங்களில் பல்லாயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மாமரங்கள், தென்னைமரங்கள் வேரோடு சாய்ந்தன. தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 13 குழுக்கள் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ஆந்திராவை போன்று ஒடிசாவில் ‘டிட்லி’ புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றுவரை வெளியான தகவலிபடி இந்த புயலுக்கு எட்டு பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அங்கு புயலால் பத்து பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவித்துள்ளனர். பலர் வீட்ட விட்டு வெளியேறி, நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் புயலால் பாதிப்புள்ளான ஆந்திரா மற்றும் ஒடிசாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி உறுதி தெரிவித்துள்ளார்.