
கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு பல இடங்களில் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது. அண்மையில் கேரளாவின் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 400க்கு மேற்பட்டோர் உயிரிழந்தது இந்திய அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில் பல இடங்களில் ஓணம் திருவிழா கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் சில இடங்களில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் தொடங்கி இருக்கிறது.
இந்நிலையில் கேரள மாநிலம் காஞ்சிக்கோடு பகுதியில் ஓணம் பண்டிகையொட்டி இட்லி சாப்பிடும் போட்டியானது நடைபெற்றது, இதில் சுரேஷ் என்ற 50 வயது முதியவர் பங்கேற்றுள்ளார். அப்பொழுது போட்டிக்காக இட்லியை அவசரமாக சாப்பிட்ட போது தொண்டையில் இட்லி சிக்கித் துடிதுடித்துள்ளார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சுரேஷ் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.