Published on 11/02/2019 | Edited on 11/02/2019

ஜப்பான் நிறுவனமான ஹோண்டா தனது வாகனங்களை புதிய வாகன விதிக்கு ஏற்றவாறு பி.வி.6 விதியின் அடிப்படையில் உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளது. இதற்காக புதிய மாற்றங்களைச் செய்யவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதுவரை தன் நிறுவனத்தின் இருசக்கர வாகனங்களின் இன்ஜினில் கார்ப்ரேட்டர்களே பயன்படுத்தப்பட்டுவருகிறது. இதற்கு பதிலாக எரிபொருள் இன்ஜெக்ஷன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.