Skip to main content

இமாச்சலப்பிரதேச தேர்தல்; விறுவிறுப்பாகத் தொடங்கிய வாக்குப்பதிவு

Published on 12/11/2022 | Edited on 12/11/2022

 

Himachal Pradesh Assembly elections 2022 voting began

 

இமாச்சலப்பிரதேசத்தில் முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் தலைமையில் பாஜக ஆட்சி நடத்தி வரும் நிலையில், அதன் ஆட்சிக்காலம் வரும் ஜனவரி மாதத்துடன் நிறைவடைய உள்ளது. இந்நிலையில் இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள 68 சட்டமன்ற தொகுதிகளுக்கு பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மொத்தம் 55,74,793 வாக்காளர்கள் தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்றவுள்ளனர்.

 

இந்த மாநிலத்தில் பெண் வாக்காளர்களை விட ஆண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர். மேலும் 38 மூன்றாம் பாலினத்தவர்களும் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். பொதுவாக இமாச்சலத்தில் காங்கிரஸ், பாஜகவிற்கு இடையேதான் போட்டி நிலவும். ஆனால் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஆம் ஆத்மியின் வருகையில் இமாச்சலத் தேர்தல் களம் மும்முனைப் போட்டியாக  மாறியுள்ளது. மூன்று கட்சிகளும் 68 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி களம் காண்கிறது.

 

இந்நிலையில் இமாச்சலப்பிரதேசத்தில் இன்று காலை 8 மணி முதல் விறுவிறுப்பாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதனால் துணை ராணுவப் படையினர், மாநிலக் காவல்துறையினர் என 30000 பேருக்கும் மேல் தேர்தல் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள் அமைத்து சிறப்பு கண்காணிப்பு குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இன்று பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் குஜராத் தேர்தலில் பதிவாகும் வாக்குகளுடன் எண்ணப்பட்டு வெற்றி பெற்றவர்கள் அறிவிக்கப்படவுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

“தாமரை மலர வேண்டும்” - கீர்த்தி சுரேஷின் தாயார்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
keerthy suresh mother menaka said bjp will win in election 2024

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடக்கும் நிலையில் முதற்கட்ட வாக்குப் பதிவு கடந்த 19ஆம் தேதி தமிழகம் உட்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகளில் நடந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்களில் மொத்தம் 89 தொகுதிகளில் நடந்து வருகிறது. 

காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் வாக்காளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். கேரளாவில் மோலிவுட் திரைபிரபலங்கள் ஃபகத் ஃபாசில், டோவினோ தாம்ஸ், மம்மூட்டி, பார்வதி உள்ளிட்ட திரை பிரபலங்கள் வாக்களித்தனர். மேலும் நடிகையும் கீர்த்தி சுரேஷின் தாயாருமான மேனகா சுரேஷ் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எந்த ஒரு விஷயத்திலும் மாற்றம் இருந்தால் தான் அது நல்லா இருக்கும். கடந்த 15 வருடத்தில் திருவனந்தபுரத்தில் எந்த மாதிரியான ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது எல்லாருக்கும் தெரியும். 

அதிலிருந்து ஒரு புதிய ஆட்சி வந்தால் நல்லா இருக்கும். அப்போது தான் நமக்கு மாற்றங்கள் ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்பது தெரியும். தாமரை மலர வேண்டும். அது என் ஆசை. கேரளாவில் பிஜேபி வந்ததேயில்லை. எல்டிஎப், யூடிஎப் இவர்களைத் தாண்டி ஒரு மாற்றம் வந்தால் நல்லா இருக்கும். பத்து தடவை கீழே விழுந்தால் பதினொறாவது முறை எழுவது இல்லையா. அதனால் மாற்றம் வரும். அந்த நம்பிக்கை இருக்கு. கேரளாவில் தாமரை மலர அதிக வாய்ப்பிருக்கு. சுரேஷ் கோபி கண்டிப்பாக ஜெயிப்பார்” என்றார்.