
முன்னாள் பிரதமரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான அடல் பிஹாரி வாஜ்பாய், நேற்று உடல்நல குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். அவரின் உடல் டெல்லியில் இருக்கும் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. பின்னர், பாஜக தொண்டர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்துவதற்காக இராணுவ வாகனத்தில் பாஜக தலைமையகத்துக்கு வாஜ்பாயின் உடல் இன்று காலை எடுத்துச்செல்லப்பட்டது.
வாஜ்பாயின் மறைவு குறித்து ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா," அவர் இந்தியா எல்லாருக்குமானதாக இருக்க வேண்டும் என்று விரும்பினார். அவருக்கு பாகிஸ்தானுடன் நட்பு ரீதியாகவே இருக்க வேண்டும் என்று நினைத்தார். அவருடைய கனவை தற்போதைய அரசாங்கமும், பாகிஸ்தானின் இம்ரான் கான் அரசாங்கமும் நிறைவேற்றுவார்கள் என்று நம்புகிறேன். இதுதான் அவருக்கு செய்யும் மரியாதை" என்று கூறியுள்ளார்.