இந்திய மென்பொருள் நிறுவனமான ஹெச்.சி.எல் அடுத்த ஐந்து ஆண்டுக்குள் இன்ஃபோசிஸ் நிறுவனத்தை வருவாய் அடிப்படையில் முந்தவேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கை நோக்கி நகர்வதற்காக அந்நிறுவனம். சில நிறுவனங்களை கையகப்படுத்தும் திட்டத்தையும் மற்றும் இதர செயல்பாடுகளையும் கையாள இருக்கிறது. இதில் 8-10% வளர்ச்சி வருவாய் மூலமாகவும், மேலும் 15-20% வளர்ச்சி கையகப்படுத்துதல் போன்ற செயல்பாடுகளாலும் இருக்கும் என்று எச்.சி.எல் நிறுவனம் தெரிவித்துள்ளது. 2022-23ஆம் ஆண்டுக்குள் நிறுவனத்தின் வருவாய் 15 பில்லியன் டாலராக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த நிதியாண்டின் அறிக்கைப்படி பார்த்தால் இரண்டு நிறுவனங்களுக்குமான வருவாய் வேறுபாடு என்பது 3.1 பில்லியன் டாலர் என்பது குறிப்பிடத்தக்கது. வளர்ச்சியில் போட்டி போடுவது நல்லதுதான். அப்படியே ஊழியர்களின் ஊதியம், வசதிகளிலும் போட்டி போட்டால் நன்றாக இருக்குமே என்று ஐ.டி. இளைஞர்கள் கூறுகின்றனர்.