Skip to main content

'அக்னிபத்தில் சேருவோருக்கு வேலை... '-ஆனந்த் மஹிந்திரா அறிவிப்பு!

Published on 20/06/2022 | Edited on 20/06/2022

 

agnipath

 

இந்திய இராணுவத்தில் நான்கு ஆண்டுகள் மட்டும் பணிபுரியும் வகையில் புதிய ஆள் சேர்க்கும் முறையான ‘அக்னிபத்’ திட்டத்திற்கு மத்திய அரசு சமீபத்தில் அனுமதி அளித்தது. இந்த அறிவிப்பு வெளியான நாள் முதல் பீகார், உத்தரப்பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் பெரும் போராட்டம் வெடித்துள்ளது. இப்பணிகளில் பெறுவோருக்கு பல்வேறு அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்கப்படும் என பாஜக ஆளும் மாநில அரசுகளும், மத்திய அரசின் சில துறைகளும் அறிவித்துள்ளன. இருப்பினும், பல்வேறு மாநிலங்களில் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பல இடங்களில் ரயில்களுக்கு தீ வைக்கும் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. இந்நிலையில் அக்னிபத் திட்டத்தைத் திரும்பப் பெற முடியாது என பாதுகாப்புத்துறை உயரதிகாரி அனில் பூரி நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.

 

நான்கு ஆண்டு பணியின்போது IAF அக்னி வீரர்களுக்குப் பிரத்தியேக சீருடை வழங்கப்படும். நான்கு ஆண்டுகள் முடிவதற்குள் அக்னி வீரர்கள் அவர்களின் சொந்த கோரிக்கையின் பேரில் பணியிலிருந்து விடுவிக்கப்பட மாட்டார்கள். விதிவிலக்கான சில சூழல்களில் மட்டும் தகுதி வாய்ந்த அதிகாரியின் ஒப்புதலுடன் அவர்கள் விடுவிக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இவர்களின் வாழ்வாதாரம் என்ன எனக் கேள்விகளை முன்வைத்து போராட்டங்கள் எழுந்துள்ளது. அதேசமயம் அக்னிபத் திட்டத்தில் ஆள் சேர்க்கும் முறைக்கு மத்திய அரசு அறிவிப்பாணையை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி அடுத்த மாதம் முதல் அக்னிபத் திட்டத்தில் ஆள் சேர்க்கும் நடைமுறைக்கான முன்பதிவுகள் தொடங்கும் எனக்கூறப்பட்டுள்ளது.

 

agnipath

 

 

இந்நிலையில் அக்னிபத் திட்டத்தில் சேரும் வீரர்களுக்கு மஹிந்திரா வேலை தருவதாக அந்நிறுவனத்தின் சேர்மன் ஆனந்த் மஹிந்திரா அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ''அக்னிபத் திட்டம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து நடந்த வன்முறையால் வருத்தம் அடைந்தேன். கடந்த ஆண்டு இத்திட்டம் முன்மொழியப்பட்டபோது நான் கூறினேன். மீண்டும் மீண்டும் சொல்கிறேன்-அக்னி வீரர்கள் பெறும் ஒழுக்கம் மற்றும் திறன்கள் அவர்களைச் சிறந்த வேலைவாய்ப்பிற்கு ஏற்றதாக மாற்றும். அத்தகைய பயிற்சி பெற்ற, திறமையான இளைஞர்களை பணியமர்த்தும் வாய்ப்பை மஹிந்திரா குழுமம் வரவேற்கிறது' எனத் தெரிவித்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“அவர்களைப் பின்பற்றினால் இந்தியா வல்லரசாகும்...” - ஹிட் பட பிரபலங்களுடன் ஆனந்த் மஹிந்த்ரா

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
anand mahindra about 12th fail movie

விது வினோத் சோப்ரா இயக்கத்தில் விக்ராந்த் மாஸ்ஸி, மேதா சங்கர், ஆனந்த் வி ஜோஷி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு அக்டோபர் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 12த் ஃபெயில். தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் கன்னடா மொழிகளில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இக்கதை மனோஜ்குமார் ஷர்மா ஐபிஎஸ் அதிகாரி மற்றும் அவரது மனைவி ஷ்ரத்தா ஜோஷி ஐஆர்எஸ்ஸின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்டது. பின்பு கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி ஓடிடியில் இப்படம் வெளியானது. அதன் பிறகு அனைத்து தரப்பு ரசிகர்களிடத்திலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. 

இந்த நிலையில், மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, இப்படத்தின் மூலம் பிரபலமான நிஜ தம்பதிகள் மனோஜ்குமார் ஷர்மா ஐபிஎஸ் மற்றும் அவரது மனைவி ஷ்ரத்தா ஜோஷி ஐஆர்எஸ் உள்ளிட்டோரை சந்தித்து ஆட்டோகிராஃப் பெற்றுள்ளார். இது குறித்து அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “நான் பெருமையுடன் வைத்திருக்கும் அவர்களின் ஆட்டோகிராஃப்களை, நான் அவர்களிடம் கேட்டபோது வெட்கப்பட்டார்கள். ஆனால் அவர்கள்தான் உண்மையான ஹீரோக்கள். 

படத்தின் கதை அவர்களின் உண்மைக் கதையை தழுவியதாக அறிந்தேன். அவர்கள் நேர்மையான ஒருமைப்பாட்டு தத்துவத்தை தொடர்ந்து கடைப்பிடிக்கின்றனர். இந்தியா உலக வல்லரசாக மாற வேண்டுமானால், அதிகமான மக்கள் அவர்களின் வாழ்க்கை முறையைப் பின்பற்றினால் அது வேகமாக நடக்கும். எனவே அவர்கள்தான் இந்த நாட்டின் உண்மையான பிரபலங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

12 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை; மத்திய பாதுகாப்பு படை குவிப்பு

Published on 25/09/2023 | Edited on 25/09/2023

 

nn

 

கேரளாவில் சுமார் 12 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே கேரளாவில் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் வீடுகளிலும் அவர்களுக்கு தொடர்புடைய இடங்களிலும் என்.ஐ.ஏ மற்றும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி இருந்தனர். அந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த சோதனையின் அடிப்படையில் மீண்டும் கேரள மாநிலத்தில் 12 இடங்களில் அதிரடியாக சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

மலப்புரம், எர்ணாகுளம், வயநாடு, திருச்சூர், கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. 300-க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்புப்படை வீரர்கள் பாதுகாப்புடன் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. முன்னாள் நிர்வாகி ஜமால் முகமது, லத்தீப் உள்ளிட்டோர் வீடுகளில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை தடை செய்த பிறகும் அதன் நிர்வாகிகள் வெளிநாட்டில் உள்ளவர்களுடன் தொடர்புடையவர்களாக இருப்பதாகவும், அவர்களுக்கு வெளிநாடுகளிலிருந்து உதவிகள் வருவதாகவும் கிடைத்த தகவல் அடிப்படையில் வங்கி கணக்குகள், கம்ப்யூட்டர்கள், மொபைல் போன்கள் உள்ளிட்ட ஆவணங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.