இளைஞர் ஒருவர் தலையில் தீ வைத்துக்கொண்டு முடிவெட்டுவது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. முடிவெட்டுதல் என்பதை இளைஞர்கள் உள்ளிட்ட அனைவரும் பார்த்து பார்த்து செய்வது வாடிக்கையான ஒன்று. இப்படி வெட்டுங்கள், அப்படி வெட்டுங்கள் என்று நாம் அனைவரும் ஒரு முறையாவது முடி திருத்துபவரிடம் சொல்லியிருப்போம். பங்க் கட்டிங், டிஸ்கோ கட்டிங் என அந்த கால கட்டிங் எல்லாம் தற்போது மாறி, புதுவிதமான மாடல்களில் கட்டிங் செய்யப்படுகிறது.
This is an origin story for a hairstyle like mine.pic.twitter.com/gBKrhr1AQH
— ???? ?????? (@JoshuaGrubbsPhD) January 27, 2020
அந்த வகையில் தற்போது இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது. அதில் இளைஞர் ஒருவர் முடிதிருத்தும் கடையில் அமர்ந்திருக்கிறார். அவருக்கு கடைக்காரர் தலையில் நெருப்பு வைத்து முடிதிருத்துவது போல அந்த வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. தலையில் தீ வைக்கும் போது உட்கார்ந்திருந்த வாலிபர் எந்த சஞ்சலமும் படவில்லை என்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது.