Published on 22/05/2019 | Edited on 22/05/2019
குஜராத் மாநிலத்தில் கடந்த மார்ச் மாதம் பத்தாம் வகுப்பு பொது தேர்வான எஸ்.எஸ்.எல்.சி தேர்வுகள் நடைபெற்றது. குஜராத் உயர்நிலை மற்றும் மேல்நிலைக் கல்வி வாரியம் நடத்திய இந்த தேர்வின் முடிவுகள் நேற்று வெளியானது.
8 லட்சத்து 22 ஆயிரத்து 823 பேர் தேர்வு எழுதியதில், வெறும் 5 லட்சத்து 51 ஆயிரத்து 23 பேர் மட்டுமே தேர்ச்சியடைந்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மாநிலத்தின் மொத்த தேர்ச்சி சதவீதம் 66.97 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டு 67.5 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்திருந்த நிலையில் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் மேலும் குறைந்துள்ளது. குறிப்பாக இந்தத் தேர்வில் 63 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.