Skip to main content

லேட்டாக திருமணத்துக்கு வந்த மணமகன்... மணமகள் எடுத்த தடாலடி முடிவு!

Published on 09/12/2019 | Edited on 09/12/2019


உத்தரப் பிரதேசம் மாநிலம் பிஜ்னோர் பகுதியில் ஒரு மாதத்துக்கு முன்னால், இளம் ஜோடிக்கு நடந்த திருமணத்தில் சடங்குகள் சரியாக நடத்தப்படாத குறையை தீர்க்க, நேற்று முன் தினம் மீண்டும் முறைப்படி திருமணம் நடத்த வேண்டுமென முடிவெடுத்தனர். முதலில் நடந்த திருமணத்தின்போது வரதட்சணை கேட்காத மணமகன் தரப்பு, இம்முறை பைக் மற்றும் பணத்தை கேட்டதால் இரு குடும்பத்தினருக்கும் வாக்குவாதம் எழுந்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த மணமகள் குடும்பத்தை சார்ந்தவர்கள், மணமகன் வீட்டாரை ஒரு அறையில் வைத்து அடைத்துவைத்து பின்பு வெளிவிட்டனர்.



இதன் காரணமாக திருமணத்துக்கு சரியான நேரத்துக்கு மாப்பிள்ளை வரவில்லை. மதியம் 2 மணிக்கு வரவேண்டிய மாப்பிள்ளையோ, நள்ளிரவில்தான் வந்துள்ளார். இதனால் அதிருப்தி அடைந்த மணமகள் வீட்டாரோ, உள்ளூரில் ஒருவரை மணமகளுக்கு திருமணம் செய்துவைத்தனர். இதனால் பழைய மாப்பிள்ளை வீட்டாருக்கும், மணமகள் வீட்டாருக்கும் மாறி மாறி ஏற்பட்ட தகராறினால், இருவரும் ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்துள்ளனர்.
 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

ஒருதலையாக காதலித்து வந்த வாலிபர்; திருமண ஊர்வலத்தில் கொடூரச் செயல்

Published on 21/06/2024 | Edited on 21/06/2024
Atrocity in wedding procession in uttar pradesh

உத்தரப் பிரதேச மாநிலம் மதோஹி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுதாமா கவுதம் (24). இந்த இளைஞருக்கு அம்மாவட்டத்தில் உள்ள ஒரு இளம்பெண்ணுடன் திருமணம் ஏற்பாடு நடைபெற்றது. அதன்படி, துலாபூர் பகதூரன் என்ற கிராமத்தில் அவர்கள் இருவருக்கும் திருமண விழா நடைபெற்றது.

அந்த விழாவையொட்டி, மணமகன் சுதாமா கவுதம், குதிரை வண்டியில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது அங்கு அடையாளம் தெரியாத நபர்கள் 3 பேர் இருசக்கர வாகனத்தில் வந்தனர். அங்கு வந்தவர்கள், இளைஞர் சுதாமா கவுதம் மீது ஆசிட்டை ஊற்றி விட்டு உடனடியாக அங்கிருந்து தப்பிச் சென்றனர். ஆசிட் ஊற்றியதில், சுதாமா கவுதமும், அவருடன் குதிரை வண்டியில் அமர்ந்திருந்த 2 சிறுவர்களும் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து, அவர்கள் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தச் சம்பவம் குறித்து மணமகன் தரப்பில் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், சுதாமா மீது ஆசிட் ஊற்றி தப்பிச் சென்ற நபர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். இதனையடுத்து, தப்பிச் சென்ற 3 நபர்களையும் போலீசார் பிடித்து கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், 3 பேரில் ஒருவரான சச்சின் பிண்ட் (23) என்ற வாலிபர், சுதாமாவுக்கு நிச்சயிக்கப்பட்ட மணமகளை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில், அந்தப் பெண்ணுக்கு திருமண ஏற்பாடு நடைபெற்றது. இதில் ஆத்திரமடைந்த சச்சின், இந்தத் திருமணத்தை நிறுத்தும் நோக்கத்தில் தனது நண்பர்களுடன் சம்பவ இடத்திற்கு வந்து மணமகன் மீது ஆசிட் வீசியுள்ளனர் என்பது தெரியவந்தது. 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து கைது செய்யப்பட்ட 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமண ஊர்வலத்தில் மணமகன் மீது ஆசிட் வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

'வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்' - நெகிழ்ந்த மணமக்கள்

Published on 16/06/2024 | Edited on 16/06/2024
'Unforgettable day of a lifetime' - excited brides

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கல்லூர் சீனிவாசா நகர்ப் பகுதியைச் சேர்ந்த சரவணன் (35) இவர் சிறுவயதில் போலியோவால் கால்கள் செயலிழந்த நிலையில் 12ஆம் வகுப்பு வரை படித்து தற்போது தனியாக குடியாத்தம் சித்தூர் கேட் பகுதியில் சொந்தமாக டீக்கடை நடத்தி வருகிறார். குடியாத்தம் பிச்சனூர் பேட்டைப் பகுதியைச் சேர்ந்த கீர்த்தனா(22) இரண்டரை அடி உயரமே உள்ள மாற்றுத்திறனாளி ஆனவர் பிஏ பட்டப்படிப்பு படித்துள்ளார்.

சரவணனுக்கும் கீர்த்தனாவும் திருமணம் செய்ய குடும்பத்தார் வரன் தேடிவந்த நிலையில் சரவணனுக்கும் கீர்த்தனாவுக்கும் பெரியோர்களால் திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்டு, இன்று குடியாத்தம் அடுத்த சித்தூர் கேட் பகுதியில் உள்ள செல்வபெருமாள் ஆலயத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.

இதனிடையே போலியோவால் கால்களை இழந்த மணமகனுக்கும் இரண்டரை அடி உயரமுள்ள மாற்றுத்திறனாளி பெண்னுக்கும் நடைபெற்ற இந்தத் திருமணத்தில் கலந்து கொண்ட பெரியவர்கள் 'வாழ்க்கையை வாழ்வதற்கு உடல் குறைபாடு தடையில்லை நீண்ட வளமுடன் வாழ' மணமக்களை வாழ்த்தினர். மணமக்களும் தங்கள் வாழ்வில் மறக்க முடியாத நாள் இது என நெகிழ்ந்தனர்.