![t1](http://image.nakkheeran.in/cdn/farfuture/DcWQVW0GFl8sVFVNahl0HpWYVRfOIvNUAA6ZDk8hQG0/1658888195/sites/default/files/2022-07/tam434.jpg)
![t2](http://image.nakkheeran.in/cdn/farfuture/E6J_QjmLbxdsE3w9xUCDOoG2iyox17uRfILerxFhfFA/1658888195/sites/default/files/2022-07/tamili323231.jpg)
![t3](http://image.nakkheeran.in/cdn/farfuture/cmXPQKTyuBkExomv_mTjMBQMMgd241nSrHHSW39ULAY/1658888195/sites/default/files/2022-07/tamili3232.jpg)
![t4](http://image.nakkheeran.in/cdn/farfuture/BTmpU4l5b3Bbz2GSw4TK_7RgKrLr_RB7Uh0QaF7Klv0/1658888195/sites/default/files/2022-07/tamil3i232.jpg)
கடந்த 1999- ஆம் ஆண்டு பாகிஸ்தான் உடன் நடைபெற்ற கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த போரில் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களை போற்றும் வகையில், ஆண்டுதோறும் ஜூலை 26- ஆம் தேதியன்று கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று (26/07/2022) புதுச்சேரி அரசு சார்பில் கடற்கரை சாலையில் நடைபெற்ற கார்கில் வெற்றி தின விழாவில், துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டு கார்கில் நினைவு தூணுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
அவர்களை தொடர்ந்து சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் கலந்து கொண்டு கார்கில் நினைவு தூணுக்கு மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் மரியாதைச் செலுத்தினர்.