Skip to main content

அருங்காட்சியகத்தில் நிஜாம் மன்னர்கள் பயன்படுத்திய தங்க டிபன் பாக்ஸ்,ஸ்பூன்,குவளைகள் திருட்டு!!

Published on 04/09/2018 | Edited on 04/09/2018

நிஜாம் அருங்காட்சியகத்தில் இருந்த பழம்பெரும் தங்க டிபன் பாக்ஸ், குவளைகள் திருடப்பட்டுள்ளது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

ஹைதராபாத் மாநிலத்தின் ஆட்சியாளர்களான நிஜாமின்  அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்தி வந்த தங்கத்தினால்  செய்யப்பட்ட டிஃபன் பாக்ஸ், கப், சாஸர் மற்றும் ஸ்பூன் ஆகியவை புராணி ஹவேலியிலுள்ள அருங்காட்சியகத்தில் அரச குடும்பத்தின் பல தனிப்பட்ட உடைமைகளுடன் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

 

Museum

 

 

 

இந்நிலையில் கடந்த ஞாயிறு இரவு நிஜாம் மியூசியத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த அந்த தங்க டிபன் பாக்ஸ்,ஸ்பூன், குவளைகள் போன்றவை திருடர்களால் திருடப்பட்டுள்ளது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

மியூசியத்தின் முதல் மாடியில் உள்ள இரும்பு கிரில்லை அகற்றி  கொள்ளையர்கள் உள்ளே புகுந்து இந்த திருட்டை நடத்தியிருக்கலாம் என போலீசார் சந்தேகித்துள்ளனர்.அதேபோல்  கட்டிடத்தில் நுழைவதற்கு கயிறு பயன்படுத்தியதாகவும் என போலீஸ் நம்புகிறது. இதுதொடர்பாக போலிஸார்  வழக்கு பதிவு செய்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அவர்கள் சி.சி.டிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர் .ஹைதராபாத் போலீஸ் ஆணையர் அஞ்சானி குமார் மற்றும் இதர மூத்த அதிகாரிகள் அருங்காட்சியகத்திற்கு நேரில் ஆய்வு செய்தனர். 

 

1930-ஆம் ஆண்டுகளில் உலகின் மிகச்செல்வந்தராக இருந்த ஆறாவது நிஜாம் பயன்படுத்திய 150 வருடம் பழமையான கைகளால் இயக்கப்படும் லிப்டுகள், அலமாரிகள், பழமையான ரோல்ஸ் ராய்ஸ் கார், 150 பழமையான ஓவியமும்  இந்த அருங்காட்சியகத்தில் உள்ளது. 

 

நிஜாமின் குடும்பம் நடத்திய நிஜாம் டிரஸ்ட் 2000-ஆம் ஆண்டில் பொதுமக்களுக்காக இந்த அருங்காட்சியகத்தை திறந்து வைத்தது. இது நகரத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகும்.

சார்ந்த செய்திகள்