Skip to main content

பெரும் சரிவில் உள்நாட்டு உற்பத்தி!! கைவிடாத விவசாயம்...

Published on 01/09/2020 | Edited on 01/09/2020

 

GDP down

 

 

மொத்த உள்நாட்டு உற்பத்தி எனப்படும் ஜி.டி.பி. கடந்த 24 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக மோசமாக -23.9% என  சரிந்துள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவித்திருக்கிறது.

 

2020-2021 ஆண்டின் முதல் காலாண்டான ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவீட்டை தேசிய புள்ளியியல் அலுவலகமும் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகமும் இணைந்து கூட்டாக வெளியிட்டுள்ளது. அதில் இந்த நிதியாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவீடு -23.9% என தெரிவித்துள்ளது.

 

மேலும், ஜி.டி.பி-ன் அளவை துறை ரீதியாகம் வெளியிட்டுள்ளது அதில் விவசாயம் தவிர்த்து மற்ற துறைகள் அனைத்தும் சரிவை சந்தித்துள்ளது என்பது தெரியவந்துள்ளது. அதன்படி,

 

எரிசக்தி மற்றும் எரிவாயு துறை: -7%

நிலக்கரித்துறை: -23.3%

தொழிற்துறை: -38.1%

உற்பத்தித்துறை: -39.3%

வணிகம், ஹோட்டல், போக்குவரத்து, தொலைத்தொடர்பு -47%

கட்டுமானத்துறை: -50.3%

 

ஆகியவை சரிவை சந்தித்துள்ளது. அதேசமயம் விவசாயத்துறை இந்த நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் 3.4% அதிகரித்துள்ளது.

 

இது ஒருபுறமிருக்க சமீபத்தில் நடந்த 41வது ஜிஎஸ்டி கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "பொருளாதாரம் கரோனா பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டது, கரோனா கடவுளின் செயல்எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.  

 

 

சார்ந்த செய்திகள்