உலகின் மிகப்பெரும் பணக்காரர்கள் பட்டியலை ‘ப்ளூம்பெர்க்’ (Bloomberg) என்ற பொருளாதார ஊடகம் வெளியிட்டுள்ளது. மேலும், அப்பட்டியல் தினமும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் முதலிடத்திலும், எலோன் மஸ்க் இரண்டாமிடத்திலும் உள்ளனர்.
இந்நிலையில், இந்த ஊடகத்தின் புள்ளிவிவரப்படி, இந்திய தொழிலதிபர் அதானி 2021ஆம் ஆண்டில் மட்டும் 16.2 பில்லியன் டாலர் சம்பாதித்துள்ளார். இது ஜெப் பெசோஸ், எலோன் மஸ்க் ஆகிய இருவரையும் விட அதிகமாகும். உலகின் பெரும் பணக்காரரான ஜெப் பெசோஸ் 7.59 பில்லியன் டாலர்களையும், எலோன் மஸ்க் 10.3 பில்லியன் டாலர்களையும் சம்பாதித்துள்ளனர். அதானி குழுமத்தின் 6 நிறுவன பங்குகளில் 5 நிறுவன பங்குகள் 50 சதவீதத்திற்கு மேல் இந்த ஆண்டு உயர்ந்துள்ளது.
இந்தக் கரோனா காலகட்டத்திலும் அதானியின் வளர்ச்சி பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. இன்னொரு இந்திய பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி, 2021இல் 8.05 பில்லியன் டாலர் சம்பாதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.