பிரதமர் மோடி மேடம் துஷாண்ட் எனும் மெழுகு சிலை நிறுவனத்திடம் தூய்மை இந்தியா திட்டம் மக்களை சென்று சேர மஹாத்மா காந்தி துடைப்பதுடன் சுற்றுப்புறத்தை சுத்தம் செய்வது போன்ற மெழுகு சிலையை நிறுவவேண்டும் என்ற கோரிக்கையை பரிந்துரைத்துள்ளார்.
மேடம் துஷான்ட் என்ற மெழுகுச்சிலை நிறுவனம் பல உலக பிரபலங்களை தத்ரூப சிலையாக உருவாக்கி அருங்காட்சியகத்தில் காட்சிபடுத்தி வருகிறது. இந்த பட்டியலில் டெல்லியில் உள்ள காட்சியத்தில் மோடி, அப்துல்கலாம், சச்சின் டெண்டுல்கர், அமிதாப் பச்சன், ஷாருக்கான் என பல பிரபலங்கள் இடம் பெற்றுள்ளனர்.
அதேபோல் டெல்லியில் உள்ள காந்தி மியூசியத்தில் உள்ள வரலாறு பிரிவில் மோடி, நேதாஜி, சர்தார் வல்லபாய் படேல், அப்துல் கலாம் ஆகியோரின் மெழுகு சிலைகளும் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் மோடி மேடம் துஸாண்ட் நிறுவனத்திடம் ஒரு வேண்டுகோளை வைத்துள்ளார். அதில் காந்தி துடைப்பதுடன் சுற்றுப்புறத்தை தூய்மை செய்வது போன்ற மெழுகு சிலையை உருவாக்க வேண்டும். அந்த சிலை அவரை பின்பற்றும் 1.25 பில்லியன் மக்களுக்கும் தூய்மையின் அவசியத்தை நடுமுழுவதும் ஊக்குவிக்கும் என கூறியுள்ளார். மேலும் அவரது மெழுகு சிலையை உருவாக்க அவர் துடைப்பத்துடன் இருப்பது போன்ற புகைப்படத்தை நான் அனுப்புகிறேன் எனவும் அந்த நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.