Skip to main content

இடைக்கால பட்ஜெட்டில் கல்விக்காக கூடுதலாக 10% ஒதுக்கீடு - பியூஷ் கோயல்

Published on 02/02/2019 | Edited on 02/02/2019

 

ee

 

2019-20-ம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு ரூ. 93,847.64 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய மத்திய இரயில்வேத்துறை மற்றும் தற்காலிக நிதி அமைச்சருமான பியூஷ் கோயல், ‘கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கல்வித்துறைக்கு கூடுதலாக 10% நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் கல்வித்துறைக்காக ஒதுக்கப்பட்ட மொத்த பட்ஜெட் தொகையில் உயர்கல்வித்துறைக்கு ரூ. 37,461 கோடி, பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ. 56,386.63 கோடி மற்றும் ஆராய்ச்சித்துறைக்காக ரூ. 608.87 கோடி என ஒதுக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.

 

 

 

சார்ந்த செய்திகள்