Skip to main content

அமலுக்கு வந்தது கார், இருசக்கர வாகனங்களுக்கான மூன்றாம் நபர் காப்பீடு!!

Published on 01/09/2018 | Edited on 01/09/2018

 

insurance

 

 

 

கார், இருசக்கர வாகனங்களுக்கான மூன்றாம் நபர் காப்பீட்டு திட்டம் இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ளது.

  

மோட்டார் வாகன சட்டப்படி மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் இன்று (செப்டெம்பர்1) முதல் விற்பனையாகும் வாகனங்களுக்கு கட்டாயம் என உச்சநீதிமன்றம் தீர்பளித்திருந்தது. இந்நிலையில் இந்திய இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை மற்றும் அபிவிருத்தி ஆணையம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருந்தது. அந்த அறிக்கையில்,

 

செப்டெம்பர் ஒன்றான இன்று முதல் வாங்கப்படும் வாகனங்களுக்கு நீண்ட கால மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் கட்டாயமாகிறது. கார்களை பொறுத்தவரை மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் திட்டம் மூன்று ஆண்டுகளாகவும், இருசக்கர வாகனங்களுக்கு 5 ஆண்டுகளாகவும் இருக்கும். இதை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்கள் செயல்படுத்தவேண்டும் என கூறப்பட்டுள்ளது.

 

மேலும் அந்த அறிக்கையில் கட்டண விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. 1,000 சி.சி.க்கு குறைவான என்ஜின் திறன் கொண்ட கார்களுக்கு 3 ஆண்டுகளுக்கான மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் தொகை ரூ.5,286 ஆகும். 1,000 முதல் 1,500 சி.சி. வரையிலான என்ஜின் திறன் கொண்ட கார்களுக்கான மூன்றாம் நபர் காப்பீடு தொகை ரூ.9,534 என்றும், 1,500 சி.சி.க்கும் அதிகமான என்ஜின் திறன் கொண்ட கார்களுக்கான மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் தொகை ரூ.24,305 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

 

 

 

அதேபோல் என்ஜின் திறன் 75 சி.சி.க்கு குறைவாக இருக்கும் இருசக்கர வாகனங்களுக்கு 5 ஆண்டுகளுக்கான மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் தொகை ரூ.1,045 ஆகும். 75 முதல் 150 சி.சி. வரையிலான என்ஜின் திறன் கொண்ட வாகனங்களுக்கு மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் தொகை ரூ.3,285 ஆகவும், 150 முதல் 350 சி.சி. வரையிலான என்ஜின் திறன் கொண்ட வாகனங்களுக்கு மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் தொகை ரூ.5,453 ஆகவும், 350 சி.சி.க்கும் அதிகமான என்ஜின் திறன் கொண்ட வாகனங்களுக்கு மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் தொகை ரூ.13,034 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

 

இந்த மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் திட்டத்தினால் வாகனங்களின் விலை உயரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

சார்ந்த செய்திகள்

Next Story

டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு; மதுரையில் பரபரப்பு!

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Tiffin box range Sensation in Madurai

மதுரை அருகே டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கீழவளவு என்ற பகுதியில் காரின் அருகே நின்று கொண்டிருந்தவர் மீது நேற்று இரவு (20.04.2024)  டிபன் பாக்ஸ் வெடிகுண்டு வீசப்பட்ட இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் அங்கிருந்த நவீன்குமார் என்பவர் காயமடைந்தார்.

மேலும் டிபன் பாக்ஸ் குண்டு வீசப்பட்டதில் நவீன்குமாருக்கு அருகில் இருந்த ஆட்டோக்காரர் கண்ணன் என்பவர் காயம் அடைந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்த கீழவளவு காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்த இருவரையும் போலீசார் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

Next Story

காரும் இருசக்கர வாகனமும் மோதி விபத்து; 5 பேர் உயிரிழப்பு!

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
madurai thirumangalam nearest two wheeler car incident

மதுரையில் காரும் இரு சக்கர வாகனமும் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சிவரக்கோட்டை என்ற பகுதியில்  திருமங்கலம் - விருதுநகர் நான்கு வழிச்சாலையில் காரும் இரு சக்கர வாகனமும் மோதி விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கி காரில் வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்கள் மதுரையில் உள்ள வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் தளவாய்புரத்தில் உள்ள கோவிலுக்கு ஆன்மிகப் பயணம் சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பிய நிலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பலியானவர்களின் உடல்கள் திருமங்கலம் மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும் படுகாயம் அடைந்த ஒருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.