Published on 13/10/2019 | Edited on 13/10/2019
இந்திய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் இரண்டு நாள் பயணமாக குஜராத் மாநிலம் சென்றுள்ளார். அம்மாநிலத்தில் அரசு சார்பில் நடைபெறவுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளார். இந்நிலையில் அம்மாநிலத்தின் காந்தி நகரில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் இல்லத்திற்கு சென்ற குடியரசுத்தலைவர் ஹீராபென்னை சந்தித்து நலம் விசாரித்தார்.
![PRESIDENT RAMNATH KOVIND MEET FOR PM NARENDRA MODI MOTHER AT GUJARAT GANDHI NAGAR](http://image.nakkheeran.in/cdn/farfuture/HOMvLy-j_O2rPOiozAGvLTz7yZfl7nyYlEdFs0MBGNQ/1570953914/sites/default/files/inline-images/EGviiMIUUAIwG6D1111.jpg)