Published on 20/10/2020 | Edited on 20/10/2020

அடுத்த 12 மணி நேரத்தில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில், அடுத்த 12 மணி நேரத்தில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதியால், ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் ஒடிசாவில் அடுத்த 48 மணி நேரத்திற்குக் கனமழை முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் தெலங்கானா மற்றும் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மத்திய வங்கக்கடல், மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். இவ்வாறு இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.