Published on 14/03/2020 | Edited on 14/03/2020
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், 39-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநில நிதி மந்திரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்திற்கு பின்பு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது, "செல்போன்களுக்கான ஜிஎஸ்டியை 12 சதவீதத்தில் இருந்து 18% ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. செல்போனில் குறிப்பிட்ட பாகங்களுக்கான ஜிஎஸ்டியும் 12%இல் இருந்து 18% ஆக உயர்த்தப்பட உள்ளது. கைகள் மற்றும் இயந்திரங்களால் தயாரிக்கப்படும் தீக்குச்சிகளுக்கு ஜி.எஸ்.டி 12% ஆக நிர்ணயம் செய்யப்பட உள்ளது" என தெரிவித்தார்.