Skip to main content

கண்ணீர்ப் புகை குண்டுகள், தண்ணீர் பீய்ச்சி அடித்துக் கலைக்கப்பட்ட விவசாயிகள்...

Published on 26/11/2020 | Edited on 26/11/2020

 

Farmers gather near Karnal's Karna Lake area to proceed to Delhi against farm laws

 

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியை நோக்கி பேரணி சென்ற விவசாயிகள் மீது கண்ணீர்ப் புகை குண்டு வீசியும் தண்ணீர் பீய்ச்சி அடித்தும் காவல்துறையினர் கூட்டத்தைக் கலைத்தனர். 

 

மத்திய அரசு கொண்டுவந்து மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு நாடு முழுவதும் விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதில் குறிப்பாக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த சட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அந்தவகையில், பஞ்சாபிலிருந்து டெல்லி வரை செல்ல ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஒன்றிணைந்து பேரணி ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இந்த பேரணி ஹரியானா பஞ்சாப்  மாநில எல்லையான ஷம்புவில் இன்று நடைபெற்றபோது, அங்கிருந்த விவசாயிகள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியதோடு, வேளாண் சட்டங்களை திரும்பப்பெறவும் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், விவசாயிகள் பேரணி மேலும் முன்னேறாமல் இருக்கும் வகையில் அதனைக் கலைக்க முற்பட்ட காவல்துறையினர், எல்லையில் கூடியிருந்த விவசாயிகள் மீது கண்ணீர்ப் புகை குண்டு வீசியும் தண்ணீர் பீய்ச்சி அடித்தும் கூட்டத்தைக் கலைத்தனர். இருப்பினும் அப்பகுதியிலிருந்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்