Published on 01/07/2018 | Edited on 01/07/2018
![ADAAR](http://image.nakkheeran.in/cdn/farfuture/b1zf3YAMNGOMzCIg1juKPcitXxweoTcsILJG8B4T18Y/1533347618/sites/default/files/inline-images/19_06_2017-aadhaar-link-with-pan-card.jpg)
பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க அடுத்த வருடம் 2019 மார்ச் 31 வரை கால அவகாசம் நீடிக்கபட்டுள்ளது.
மத்திய அரசு வருமானவரித்துறையின் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என அறிவித்து ஓராண்டு காலஅவகாசம் கொடுத்திருந்தது. அந்த காலஅவகாசம் நேற்று இரவுடன் முடிந்தது. அதை தொடர்ந்து மத்திய அரசின் நிதி அமைச்சகத்தின் நேரடி வரிகள் வாரியத்தின் சார்பு செயலாளர் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க அடுத்த வருடம் மார்ச் 31 தேதிவரை கால அவகாசம் நீட்டிக்கபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
வருமானவரி தாக்கல் செய்யும்பொழுது பான் கார்டுடன் ஆதார் எண் கட்டாயமாக இணைக்கப்பட வேண்டும் என மத்திய அரசு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தத நிலையில் இந்த கால அவகாச நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.