கர்நாடகத்தில் அடுத்த மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான ஓட்டு வேட்டையில் காங்கிரசும் பா.ஜ.க வும் போட்டி போட்டு களமிறங்கி வருகின்றனர். காவிரி நதிநீர்ப் பங்கீடு குறித்த நீதிமன்ற உத்தரவு, காவிரி மேலாண்மை போன்ற அத்தனை விஷயங்களில் பின்னாலும் கர்நாடக தேர்தல் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் கர்நாடகாவில் உள்ள பெலகாவியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பா.ஜ.க எம்.எல்.ஏ சஞ்சய் பாட்டில், வெறுப்புணர்வை தூண்டும் விதத்தில் பேசியுள்ளார்.
‘இந்த தேர்தல் சாலைகளைப் பற்றியோ, நீரைப் பற்றியோ மற்ற பிரச்சினைகளைப் பற்றியோ அல்ல. இது இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே நடக்கும் தேர்தல். இராமர் கோயிலுக்கும் பாபர் மசூதிக்கும் இடையே நடக்கும் தேர்தல்’ என்று பேசியுள்ளார்.
தேர்தல் சமயங்களில் தொடர்ந்து மதவெறியைத் தூண்டும் விதமாக பா.ஜ.க வினர் பேசி வருவது வாடிக்கையாகி வருகிறது. இந்நிலையில் பா.ஜ.க எம்.எல்.ஏ வின் மதவெறிப் பேச்சு மக்களிடையே பெரும் கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது.